நடிகை த்ரிஷா
கதாநாயகியாக சினிமாவில் நீண்ட காலங்கள் இருக்க முடியாது என கூறுவார்கள். ஆனால் அதனை உடைத்து 22 ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டு இருக்கிறார்.
விஜய், அஜித், கமல், சூர்யா என வரிசையாக முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இவர் 22 ஆண்டுகளை சினிமாவில் நிறைவு செய்துள்ளார். சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பில் இதற்காக கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
டீ ஏஜிங் செய்யாமல் இளமையாக மாறிய அஜித்.. இணையத்தை அதிரவைத்த புகைப்படம்..
சொத்து மதிப்பு
இந்த நிலையில், 22 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 120 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 12 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார் என கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.