புஷ்பா 2
அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021ல் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் புஷ்பா 2. இயக்குநர் சுகுமார் இப்படத்தை இயக்க அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து புஷ்பா 2 படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதனை புஷ்பா 2 படமும் பூர்த்தி செய்துள்ளது. கடந்த வாரம் வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் 6 நாட்களில் ரூ. 1000 கோடியை கடந்தது.
22 ஆண்டுகளில் நடிகை த்ரிஷா சேர்த்த சொத்து.. முழு விவரம் இதோ
இந்திய சினிமாவில் இதுவரை எந்த ஒரு படமும் 6 நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்ததே இல்லை. புஷ்பா 2 தான் முதல் முறையாக இந்த சாதனையை படைத்துள்ளது. மேலும் தற்போது 10 நாட்களில் உலகளவில் ரூ. 1200 கோடியை எட்டியுள்ளது.
தமிழக வசூல் விவரம்
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 10 நாட்களில் புஷ்பா 2 திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளது புஷ்பா 2 திரைப்படம். இனி வரும் நாட்களில் எவ்வளவு அதிகரிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.