புதிய இணைப்பு
இந்திய நிதியமைச்சர், வெளிவிவகார அமைச்சர்களுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று (15) இரவு, இந்திய நிதி மற்றும் கூட்டுத்தாபன விவகார அமைச்சர் நிர்மலா சீதா ராமன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிதியமைச்சருடன் சந்திப்பு
ஜனாதிபதி மற்றும் நிர்மலா சீதா ராமன் ஆகியோர் இந்திய – இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
மேலும் இந்தியர்களை இலங்கைக்கு அழைத்து வருதல், விவசாய நவீனமயமாக்கல் மற்றும் இலங்கையில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சருடன் முக்கிய பேச்சு
இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோரிடையே நடைபெற்ற சந்திப்பில், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியாவின் பாரிய சந்தையைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நாட்டில் சுற்றுலா, முதலீடு மற்றும் எரிசக்தி துறைகளுக்கு ஆதரவளிக்க இந்திய அரசு ஒப்புக்கொள்கிறது என்றும் ஜெய்சங்கர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
கடற்றொழில் மற்றும் தேசிய ஒற்றுமையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகள் குறித்து கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.
இந்த கலந்துரையாடல்களின் பின்னர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பிராந்திய பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், தொழிலாளர் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
முதலாம் இணைப்பு
இந்தியாவிற்கான(india) பயணத்தை மேற்கொண்டள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(anura kumara dissanayake) இன்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார்.
இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன்,(murugan) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா(Santosh Jha), இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால், இந்திய உபசரணைப் பிரதானி அன்ஷுமன் கவூர் உள்ளிட்ட இராஜதந்திரிகள் ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் சிறப்பானவரவேற்பை அளித்தனர்.
இந்திய ஊடகங்கள் சிறப்பாக பிரசாரம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் சிறப்பாக பிரசாரம் செய்திருந்ததுடன், புதுடில்லி நகரின் பிரதான சுற்றுவட்டாரத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்(jaishakar), இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால்(ajith doval) உள்ளிட்டவர்களை இன்று (15) இரவு சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
ஜனாதிபதியுடன் சென்றோர்
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath), தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ(anil jayantha fernando) உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.