கடந்த ஆட்சியில் குற்றமிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் தப்பவே முடியாது என்று
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த ஆட்சியில் நடந்தேறிய ஊழல், மோசடிகள் மற்றும் சட்டவிரோத
நடவடிக்கைகளால்தான் நாடு அதளபாதாளத்துக்குச் சென்றது.
மக்களால் நிறுவப்பட்ட ஆட்சி
கடந்த ஆட்சியாளர்கள் நாட்டைச் சீரழித்து குடும்ப ஆட்சியை
முன்னெடுத்தபடியால்தான் மக்கள் அணிதிரண்டு, அந்த ஆட்சியாளர்களை
விரட்டியடித்தார்கள்.
தற்போதைய ஆட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் மக்களால் நிறுவப்பட்ட ஆட்சி.
நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களால் நிறுவப்பட்ட ஆட்சி. எனவே,
கடந்த ஆட்சியில் குற்றமிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் தப்பவே முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.