முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டு.கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையில் அரங்கேறியுள்ள முறைக்கேடு!

தகவல் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை, கல்லடி காரியாலயத்துக்கு சென்ற தன்னை அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் கைத்தொலைபேசியில் வீடியோ பதிவு செய்து கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முகமது தம்பி உவைஸ் முறைப்பாடு அளித்துள்ளார்.

குறித்த முறைப்பாடானது, இன்றையதினம் (17) காத்தான்குடி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் படி அவர் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது, “16/12/2024ம் திகதி பிற்பகல் 3.00 மணியளவில் நானும் எனது வயதுக்கு வந்த பெண்பிள்ளையும் காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்லடியில் அமைந்துள்ள கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை காரியாலயத்தில் ஒரு தகவல் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக சென்று அங்குள்ள பெண் உயர் அதிகாரியிடம் விடயங்களை பேசிக் கொண்டு இருக்கும் போத அங்கு வந்த வசந்தன் என்று அழைக்கப்படும் நபரான அங்கு வேலை செய்பவருமான அவர் என்னையும் எனது மகளையும் தன்னுடைய தொலைபேசியில் வீடியோ எடுப்பதை எனது மகள் அவதானித்துள்ளார்.

முறைப்பாடு 

என்னிடம் விடயத்தை கூற நான் அவரை நோக்கி ஏன் வீடியோ எடுக்க வேண்டும் ஏன் இவ்வாறு நடந்து கொள்வதாக கேட்ட போது, அந்த உயர் அதிகாரியும் பெண் உத்தியோகத்தரும் பார்த்துக் கொண்டிருந்ததை என்னால் உணரக்கூடியதாக இருந்தது.

மட்டு.கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையில் அரங்கேறியுள்ள முறைக்கேடு! | Uwais Complaint Kattankudy Police Death Threats

நான் வீடியோ எடுத்த நபரான வசந்தன் என்பரிடம் உங்கள் காரியாலயத்துக்கு வரும் பெண்களையும் வேலை நிமித்தம் வரும் பொது மக்களையும் இவ்வாறு தொலைபேசியில் வீடியோ எடுப்பது குற்றமல்லவா இவ்வாறு ஒரு அரச அலுவலகத்தில் இவ்வாறு நடந்து கொள்ளலாமா என கேட்ட போது அவர் என்னை பார்த்து பல தகாத வார்த்தையால் பேசினார்.

 அதுமட்டுமல்ல இது தொடர்பாக நான் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்வேன் என கூறியதற்கு என்னை கொலை செய்வேன் என அச்சுறுத்தினார்.

வழக்கு தாக்கல்

எனவே அரச அலுவலகத்தில் ஒரு அரச ஊழியராக இருந்து கொண்டு இவ்வாறு மது போதையில் அலுவலகத்திற்கு வரும் பெண்களையும் மக்களையும் வீடியோ எடுப்பது சட்டத்திற்கு முறையற்ற விடயமாகும்.

மட்டு.கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையில் அரங்கேறியுள்ள முறைக்கேடு! | Uwais Complaint Kattankudy Police Death Threats

எனவே இச் செயலை செய்த கடல் சூழல் பாதுகாப்பு அதிகார உத்தியோகத்தரான வசந்தன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தின் ஊடாக வழக்கு தாக்கல் செய்து தருமாறு தயவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.”

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.