புஷ்பா 2
நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது புஷ்பா.
முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் செம மாஸாக தயாராகி கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியானது.
இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி தனது மனைவியுடன் வந்து ரசிகர்களுடன் திரையரங்கில் படம் பார்த்தார் அல்லு அர்ஜுன். அப்போது யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது.
கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் அங்கேயே உயிரிழக்க அவரது மகன் ஸ்ரீதேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மூளைச்சாவு அடைந்துள்ளார்.