முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்வதேச போர்க்குற்றவாளி டெர்மினேட்டர் இலங்கைக்குள் ஊடுருவல்

பாலஸ்தீன பிரஜையை கொலை செய்து, அவரது உடலை தவறான செய்கைக்கு உட்படுத்தியதாக தெரிவித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள இஸ்ரேலிய சிப்பாய் இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கெல் பெரன்புக் என அழைக்கப்படும் குறித்த நபர் இலங்கைக்கு வந்து கொழும்பில் தங்கியிருப்பதாக பெல்ஜியத்தை சேர்ந்த அரச சார்பற்ற அமைப்பு ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

டெர்மினேட்டர் எனப்படும் பெரன்புக்கை கைது செய்யுமாறு இலங்கை அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் ஒத்துழைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக “The Hind Rajab Foundation” எனும் அரச சார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச குற்றவியல்

இச்சம்பவம் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறையான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச போர்க்குற்றவாளி டெர்மினேட்டர் இலங்கைக்குள் ஊடுருவல் | International War Criminal In Colombo

அவரைக் கைது செய்ய சர்வதேச சிவப்பு அறிவிப்பை வெளியிடுமாறு சர்வதேச பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக The Hind Rajab Foundation தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ பெரன்புக் எப்படி ஒரு கொடூரமான நபர், அவர் பாலஸ்தீனிய பிரஜையை கொன்று அதைப் பற்றி சிரித்து தற்பெருமை காட்டுவதாகவும் அமைப்பு குறிப்பிடடுள்ளது.

பொலிஸார் விளக்கம்

உயிரிழந்தவரின் கண்ணியத்தை புறக்கணித்து சர்வதேச மனிதாபிமான சட்டத்தை பெரன்புக் மீறியதாகக் கூறும் The Hind Rajab Foundation, இலங்கையில் பெரன்புக் இருப்பது அவருக்கு பொறுப்புக் கூற வேண்டிய முக்கியமான வாய்ப்பை வழங்குகிறது என்றும் தெரிவித்துள்ளது.

சர்வதேச போர்க்குற்றவாளி டெர்மினேட்டர் இலங்கைக்குள் ஊடுருவல் | International War Criminal In Colombo

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் நீதியை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அதிகாரிகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச பொலிசார் விரைந்து செயற்பட வேண்டுமெனவும், இவ்வாறான அட்டூழியங்களுக்கு தண்டனை வழங்கப்படாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஹிந்த் ரஜப் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

The Hind Rajab Foundation வெளிப்படுத்திய இந்த உண்மை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவிடம் வினவிய போது, வெளிவிவகார அமைச்சிலிருந்து எவ்வித அறிவிப்பும் வரவில்லை என தெரிவித்துள்ளார்.

வேறொரு நாட்டில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஒருவர் எமது நாட்டிற்குள் பிரவேசித்திருந்தால் அவரை கைது செய்ய வெளிவிவகார அமைச்சு ஊடக பொலிஸாருக்கு அறிவித்தல் கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.