விவேக்
கே.பாலசந்தர் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகர் விவேக்.
தனது கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி எந்த ஓரு ஈகோவும் பார்க்காமல் தன்னுடன் வளர்ந்துவந்த வடிவேலுவுடன் இணைந்தே பல படங்களில் நடித்திருக்கிறார்.
வெறும் காமெடி என்று இல்லாமல் தனது காமெடியில் பகுத்தறிவு சிந்தனையையும், முற்போக்கு சிந்தனையையும் அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொண்டவர். கொரோனா காலத்தில் இவர் திடீரென உயிரிழக்க எல்லோருக்கும் ஷாக் ஆனது.
12 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ள சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி… அவரே சொன்ன விஷயம்
காரணம் என்ன
அண்மையில் ஒரு பேட்டியில் தனது கணவர் விவேக் அவர்களின் உயிரிழப்பு காரணம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், கொரோனா சமயத்தில் மக்கள் குழப்பமான மனநிலையில் இருந்தார்கள். விவேக் கூட நிறைய தடுப்பூசி போடலாமா வேண்டாமா என்று குறித்து ஆலோசனை செய்தார்.
இரண்டு முறை தடுப்பூசி போட முயற்சி செய்ய 3வது முறை தடுப்பூசி போட்டுக் கொண்டார், ஆனால் அடுத்த நாள் அவர் உயிரிழந்துவிட்டார். அவர் இறந்ததற்கான காரணம் என்னவென்று எனக்கு இப்போது வரை தெரியவிலை.
அவர் தனது உடலை அப்படி பார்த்துக் கொள்வார், அவர் போல் யாராலும் பார்த்துக்கொள்ள முடியாது. வாக்கிங், உடற்பயிற்சி என தன்னை நன்றாக பார்த்துக் கொண்டவர் எப்படி ஒரு இறப்பை இப்படி சந்திக்க முடியும் என்கிற குழப்பம் எங்களுக்கு வந்தது.
எல்லோரும் தான் தடுப்பூசி கொரோனாவிற்கு போட்டார்கள், அனைவரும் இறக்கவில்லை. விவேக் இறப்புக்கு தடுப்பூசி தான் காரணம் என்று சொல்ல முடியாது என்றார்.