இலஞ்சம் ஊழல் என்பவற்றை முற்றுமுழுதாக ஒழிப்போம் என பதவிக்கு வந்த அநுர அரசு மதுபானசாலை விவகாரத்தில் சற்று பின்னிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசியல் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூரிய அநுர அரசு அந்த விடயத்தில் இருந்து பின்வாங்குவது என்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (19.12.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுடார்.
மேலும், இந்த வருடத்தில் 361 மதுபானசாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கியதாக அநுர அரசாங்கம் அறிவித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
எனினும் அநுர அரசு குறித்த விடயம் தொடர்பில் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்
அந்த வகையில் எமது பிரதேசத்தை பொறுத்தவரையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தாம் சிபாரிசு செய்து ஒத்துக் கொண்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளி காணலாம்
https://www.youtube.com/embed/7OVkDkudRW4