அட்லீ
தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் அட்லீ.
ராஜா ராணி படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் அடுத்தடுத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என 3 பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார்.
அப்படங்களின் வெற்றி அப்படியே பாலிவுட் பக்கம் சென்றவர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். அப்படம் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ரூ. 1,200 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தி மாஸ் செய்தது.
வெற்றிமாறனின் விடுதலை 2 படம் எப்படி உள்ளது.. Live Updates
அடுத்த படம்
ஜவான் படத்தை தொடர்ந்து தெறி படத்தை அட்லீ பேபி ஜான் என்ற பெயரில் ஹிந்தியில் தயாரித்துள்ளார். இதில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளார்கள்.
இப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் அட்லீ பேசும்போது, எனது அடுத்த படம் உண்மையில் அதிக நேரத்தையும் சக்தியையும் எடுக்கும். நாங்கள் கிட்டத்தட்ட ஸ்கிரிப்டை முடித்துவிட்டோம். மிக விரைவில் கடவுளின் ஆசீர்வாதத்துடன் ஒரு பெரிய அறிவிப்பு வரும்.
இப்படம் நாட்டை பெருமைப்படுத்தும் என்று நினைக்கிறேன், உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும் எங்களுக்குத் தேவை என்றார்.