விடுதலை 2
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றியடைந்த படம் விடுதலை முதல் பாகம்.
இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், நேற்று பிரம்மாண்டமான முறையில் விடுதலை இரண்டாம் பாகம் வெளிவந்தது.
விடுதலை 2 திரைவிமர்சனம்
கதையின் நாயகன் சூரி, வாத்தியார் விஜய் சேதுபதியுடன் இணைந்து இப்படத்தில் மஞ்சு வாரியர், கிஷோர், கென் கருணாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். மக்களுக்காக போராடிய, ஆனாலும் மக்களுக்கே தெரியாத, தலைவர்கள் குறித்து இப்படம் பேசியுள்ளது.
வசூல்
இந்த நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள விடுதலை 2 திரைப்படம் உலகளவில் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளது.
முதல் நாள் நல்ல வரவேற்பை கிடைத்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.