பிக் பாஸ் 8ம் சீசனில் போட்டியாளராக இருக்கும் அருண் பிரசாத்துக்கு அவரது காதலியான நடிகை அர்ச்சனை ஆதரவாக தொடர்ந்து பேசி வருகிறார். முந்தைய சீசன் டைட்டில் வின்னர் ஆன அர்ச்சனா இதற்காக சில விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.
தனக்கு மோசமான மிரட்டல்கள் வருவதாகவும் அர்ச்சனா சில வாரங்கள் முன்பு பதிவிட்டு இருந்தார்.
கடந்த சீசனின் மற்றொரு போட்டியாளரான மாயா இதற்கு கமெண்ட் செய்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
‘ஒரு குறிப்பிட்ட போட்டியாளரின் PR ஏஜென்சி செயலால் இதை விட 100 மடங்கு மிரட்டல்கள் மற்றும் ட்ரோல்களை நான் சந்தித்தேன். இப்போதும் சந்தித்து கொண்டிருக்கிறேன்’ என மாயா பதிவிட்டுள்ளார்.
அர்ச்சனா பதிலடி
மாயாவின் பதிவுக்கு பதிலடி கொடுத்து X தளத்தில் அர்ச்சனா பதிவிட்டு உள்ளார். “உங்களுக்கு நடந்தால் மட்டும் தான் அது தவறு என பேசுவீங்களா.
என் குடும்பமும் தான் அதனால் பாதிக்கப்பட்டது.”
“இதுபோன்ற நேரத்தில் ஆதரவாக இருக்க வேண்டும், சந்தர்ப்பவாதியாக அல்ல” என அர்ச்சனா பதிலடி கொடுத்து இருக்கிறார்.
Dear @maya_skrishnan
I saw your post, and while I empathize with what you and others have gone through, it’s interesting how things seem wrong only when they happen to you. For the record, some of ‘someone’s PR stunts’ last season didn’t spare my family either. #IYKWIM
Not… https://t.co/qFp1VZWt0q
— Archana Ravichandran (@Archana_ravi_) December 22, 2024