சிறகடிக்க ஆசை
விறுவிறுப்பின் உச்சமாக இந்த வாரம் இருக்கப்போகிறது சிறகடிக்க ஆசை சீரியல். காரணம் இந்த வாரத்திற்கான புரொமோவில் அப்படி ஒரு கதைக்களம் காட்டப்பட்டுள்ளது.
தனது அப்பாவின் பணத்தை எடுத்துச்சென்றவர் தன்னிடம் சவாரி வந்தவர் என்பதை அறிந்த முத்து அவரிடம் சென்று சண்டை போடுகிறார். அவரோ நான் போன முறை வந்த போதே உனது அண்ணனிடம் பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுத்துவிட்டேன் என கூறுகிறார்.
இதனால் முத்து செம ஷாக் ஆகி தனது வீட்டில் வந்து கூறும்படி கேட்டிகிறார். நேற்று வந்த புரொமோ செம வைரலானது.
இன்றைய எபிசோட்
இன்று சிறகடிக்க ஆசை சீரியலில், மனோஜ் வீட்டை தனது பெயரில் பதிவு செய்ய எவ்வளவு பணம் செலவு ஆகும் என ரெஜிஸ்டர் ஆபிஸ் வந்து கேட்கிறார். அப்போது ஜீவாவும் அங்கு வருகிறார்.
அடுத்த கதைக்களத்தில் விஜயா, அண்ணாமலையுடன் வாக்கிங் சென்று மகனின் பெருமையை பாடி வருகிறார்.
பின் எபிசோட் கடையில் மனோஜ் வாங்கியதாக பெருமைக் கொள்ளும் அந்த வீட்டின் நிஜ உரிமையாளர் வந்து இது என்ன வீடு என கூற மனோஜ், ரோஹினி, விஜயா என மொத்த குடும்பமும் ஷாக் ஆகிறார்கள்.