நாட்டை நெருக்கடியிலிருந்து வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதில் முன்னாள் அரசாங்கத்தின் கூட்டு கடின உழைப்பும், உறுதியும் தற்போது வலுவான, உறுதியான முடிவுகளை தருவதாக முன்னாள் நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) கூறியுள்ளார்.
ஃபிட்ச் மதிப்பீடுகள் நீண்டகால வெளிநாட்டு நாணய வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை ‘கட்டுப்படுத்தப்பட்ட இயல்பு நிலையிலிருந்து CCC+ ஆக மேம்படுத்தியுள்ளமை குறித்தே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
பொருளாதார மீட்சி
இந்த மைல்கல் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் வெற்றியை எடுத்துக் காட்டுகிறது.
அத்துடன் இலங்கையின் பொருளாதார மீட்சியில் உள்ளூர் மற்றும் உலகளாவிய நம்பிக்கையை அதிகரிக்கிறது என்றும் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.