பனியால் சூழ்ந்த கண்டமான அண்டார்டிகாவில்(Antarctica) பென்குயின் ஒன்றின் நடத்தை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்டார்டிகாவில், ஒரு ஜோடி பனி படர்ந்த பாதையில் நடந்து செல்கின்றனர்.
அதே நேரத்தில், ஒரு சிறிய பென்குயினும் அவர்கள் பின் செல்கின்றது.
இருப்பினும், அந்த ஜோடி சிறிது நேரம் நடந்து செல்லும் வழிகளில் அங்கேயே நின்று, அங்கே சுற்றி திரியும் பென்குயின்களின் அழகை கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர்.
பென்குயினின் நடத்தை
அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த ஒரு பென்குயின், அவர்களை தள்ளி செல்வதற்குப் பதிலாக, அவர்களையே பார்த்துக் கொண்டு அவர்கள் ஒதுங்கும் வரை பொறுமையாகக் காத்திருக்கிறது. பின் அந்த ஜோடி பென்குயினுக்கு வழி விட்டதும் அது செல்கிறது.
View this post on Instagram
இந்நிலையில், இந்த காணொளியை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.