விடாமுயற்சி
வித்தியாசமான திரைக்கதையில் எப்போதும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் மகிழ் திருமேனி.
இவருடைய இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. அஜித் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என பலரும் நடித்து வருகிறார்கள்.
5 பாடல்களுக்கு இத்தனை கோடி செலவு செய்தாரா ஷங்கர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
வருகிற 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளிவரவுள்ளது. இன்னும் 16 நாட்களே இருக்கும் நிலையில், வெளிநாட்டில் விடாமுயற்சி படத்திற்கான ப்ரீ புக்கிங் துவங்கிவிட்டது.
ப்ரீ புக்கிங் வசூல்
இந்த நிலையில், விடாமுயற்சி படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ரூ. 15 லட்சம் வசூல் செய்துள்ளது என கூறுகின்றனர். இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாஸ் ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது.