கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். சமீபத்தில் கோவாவில் இவருடைய திருமணம் விமர்சையாக நடைபெற்று முடிந்தது. தனது 15 வருட காதலரான ஆண்டனியை கீர்த்தி சுரேஷ் கரம்பிடித்தார்.
GOAT படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கப்போகும் அடுத்த படம்.. அதிரடி அப்டேட்
திருமணம் முடிந்த கையோடு நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பட ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார். பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை கீர்த்தியின் நடிப்பில் நாளை வெளிவரவிருக்கும் படம் பேபி ஜான்.
தமிழில் வெளிவந்த தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் இப்படம். இப்படத்தை காலீஸ் என்பவர் இயக்க, அட்லீ தயாரித்துள்ளார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் சமந்தா குறித்தும் பேபி ஜான் படம் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
ஓபன் டாக்
அதில், ” பேபி ஜான் திரைப்படம் ஹிந்தி ரசிகர்களுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தமிழில் வெளியான தெறி படத்தில் சமந்தா அவருடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
அவரின் அந்த கேரக்டரை ஏற்று நடிக்க தான் சிறிதும் பயப்படவில்லை. சமந்தாவை போன்று என்னுடைய கேரக்டரும் மிகவும் அழகாக வந்துள்ளது” என்று கூறியுள்ளார்.