முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் பெண்களை தவறான உறவுக்கு அழைத்த காவல்துறை உத்தியோகத்தர் : நையப்புடைத்த இளைஞர்கள்

காங்கேசன்துறை காவல் நிலைய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை
மதுபோதையில் தவறான உறவுக்கு அழைத்தமையினால்
அப்பகுதியில் சர்ச்சையான சூழல் உருவாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள இளைஞர்களால் குறித்த காவல்துறை உத்தியோகத்தர்
நையப்புடைக்கப்பட்டு காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காங்கேசன்துறை காவல் நிலைய
உத்தியோகத்தர் ஒருவர் இன்று (24) காலை மாவிட்டபுரம் தையலகத்தில் தைப்பதற்கு கொடுத்த
சீருடையை எடுப்பதற்கு மது போதையில் சென்று தையலகத்தில் பணிபுரியும்
பெண்களுடன் தன்னுடன் தவறான உறவுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார்.

தவறான உறவு

தொடர்ந்து குறித்த கடைக்கு வந்த இரு யுவதிகளிடமும் தன்னுடன் தவறான உறவுக்கு
வருமாறு கொச்சைத் தமிழில் கேட்டுள்ளார்.

யாழில் பெண்களை தவறான உறவுக்கு அழைத்த காவல்துறை உத்தியோகத்தர் : நையப்புடைத்த இளைஞர்கள் | Police Officer Indecent Act Towards A Woman Jaffna

அதனால், ஆத்திரமடைந்த குறித்த பெண் தனது கணவருக்கு தொலைபேசியில் தெரிவித்த
நிலையில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் அருகில் குறித்த காவல்துறை உத்தியோகத்தர்
நையப்புடைக்கபட்டு பொதுமக்களால் முச்சக்கர வண்டி மூலம் காவல் நிலையத்திற்கு
கொண்டு வரப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், காவல் நிலைய பொறுப்பதிகாரி குறித்த பெண்ணை விசாரிக்க முற்பட்ட
போது தன்னிடம் கார் உள்ளதாகவும் நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்னுடன் தவறான இச்சைக்கு வருகிறாயா ? என கேட்டு மதுபோதையில் கலகம் செய்ததாக அப்பெண்
தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெண்ணின் உறவினர் தன்னிடம் காணொளியும் உள்ளதாக
குறிப்பிட்டுள்ளார்.

பாரபட்சமற்ற விசாரணை

உடனே குறித்த காவல்துறை உத்தியோகத்தர் குறித்த பெண்ணின் கணவன் மீது
காவல் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடாத்தியுள்ளார்.

யாழில் பெண்களை தவறான உறவுக்கு அழைத்த காவல்துறை உத்தியோகத்தர் : நையப்புடைத்த இளைஞர்கள் | Police Officer Indecent Act Towards A Woman Jaffna

உடனடியாக காவல்துறையினர் குறித்த உத்தியோகத்தரை தடுத்து நிறுத்திய நிலையில்
பொறுப்பதிகாரி தனது அறையினுள் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து சமரசம் செய்யுமாறு
கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து, குறித்த விடயம் மனித உரிமை
ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டு பாரபட்சமற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்
என காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு யாழ். பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின்
த.கனகராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தற்போது இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.