முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் கைது நிச்சயம் : போலந்து நாட்டின் அதிரடி உத்தரவு

இஸ்ரேல் (Israel) பிரதமர் நெதன்யாகு (Benjamin Netanyahu) போலந்து செல்ல உள்ள நிலையில், அவர் போலந்து (Poland) வந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்று அந்நட்டு அரசு தெரிவித்துள்ளது.

பலஸ்தீனத்தில் (Palestine) ஆயிரக்கணக்கான உயிர்களை இஸ்ரேல் இராணுவம் கொன்று குவித்திருக்கிறது.

இது தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிடியானை பிறப்பித்திருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹமாஸ் தாக்குதல்

பலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்ததுடன், இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்சத்தை எட்டியது.

சுதந்திர பலஸ்தீனத்திற்காகவும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் ஹமாஸ் (Hamas) தாக்குதலை நடத்தியிருந்தது.

இதில் 100 பேர் வரை கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியிருந்த போதும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் பொதுவெளியில் பகிரப்படவில்லை.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் கைது நிச்சயம் : போலந்து நாட்டின் அதிரடி உத்தரவு | Netanyahu Arrested If He Enters Poland Government

இருப்பினும், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கிறோம் என்று இஸ்ரேல் பலஸ்தீனம் மீது போரை தொடுத்தது.

அமெரிக்க இராணுவத்தின் உதவியுடன் இஸ்ரேல் போரில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருந்தது.

இறுதியாக சில நாட்களுக்கு முன்னர் ஹமாஸ் தலைவரைகளையும் இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்தது.

போர் காரணமாக பலஸ்தீனத்தில் இராணுவ வீரர்கள் தவிர, 45,259 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நீதிமன்றம்

இவர்களில் சரிபாதி பெண்களும், குழந்தைகளும் என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் கைது நிச்சயம் : போலந்து நாட்டின் அதிரடி உத்தரவு | Netanyahu Arrested If He Enters Poland Government

இந்த வழக்கு பல நாட்களாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பின்படி நெதன்யாகு போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

அவரை கைது செய்ய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளில்தான் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

போலந்து

இஸ்ரேல் இதில் உறுப்பினர் கிடையாது.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கூட உறுப்பினர்களாக இல்லை. எனவே, இந்த நாடுகளுக்கு நெதன்யாகு போகும் போது அவர் கைது செய்யப்பட மாட்டார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் கைது நிச்சயம் : போலந்து நாட்டின் அதிரடி உத்தரவு | Netanyahu Arrested If He Enters Poland Government

இதே சர்வதேச நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளுக்கு சென்றால் கைதாக வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

அடுத்த சில நாட்களில் நெதன்யாகு போலந்து செல்ல இருக்கிறார்.

அங்கு ஆஷ்விட்ஸ் விடுதலையைக் குறிக்கும் முக்கிய நிகழ்வில் அவர் பங்கேற்க இருப்பதாக சொல்லப்பட்டது.

போலந்து சர்வதேச நீதிமன்றத்தின் விதிகளை ஏற்றுக்கொண்டிருக்கிறது.

அங்கு சென்றால் நெதன்யாகு கைதாகலாம் என்று பேசப்பட்டது.

இதனை உறுதி செய்யும் விதமாக, போலந்து நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர், “நெதன்யாகு எங்கள் நாட்டுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்” என்று கூறியிருக்கிறார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.