உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்களுக்கான சிறப்பு யூபிலி ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் பாப்பரசர் பிரான்சிஸ்(Pope Francis) புனித கதவைத்(Holy Door) திறந்து வைத்தார்.
கிறிஸ்துமஸ் தினம் அன்று வத்திக்கானில்(Vatican) நடைபெற்ற விழாவில் ரோமன் கத்தோலிக்கர்களுக்கான சிறப்பு ஜூபிலி ஆண்டை பாப்பரசர் திறந்து வைத்தார்.
வத்திக்கானில் செங்கற்களால் கட்டப்பட்ட புனித பீட்டர் பேராலயத்தின் புனித நுழைவாயில் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது.
25 ஆண்டுகளுக்கு ஒருமுறை யூபிலி ஆண்டு
25 ஆண்டுகளுக்கு ஒருமுறை யூபிலி ஆண்டு வருகிறது.
உலகம் முழுவதிலுமிருந்து 30 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் ரோம் வந்து தங்கள் பாவங்களுக்கு பரிகாரம் தேடும் வகையில் இந்த நுழைவாயிலை கடந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 6, 2026 அன்று இறைவனின் திருவுருவப் பெருவிழாவில் புனித நுழைவாயிலின் மூடுதலுடன் ஜூபிலி முடிவடைகிறது.
கடந்த 2000 ஆம் ஆண்டு பாப்பரசர் புனிதர் இரண்டாம் ஜோன் போல்(Pope Saint John Paul II) அவர்களால் வழக்கமான ஜூபிலி கொண்டாட்டத்திற்காக புனித கதவு திறக்கப்பட்டது. மேலும் பாப்பரசர் பிரான்சிஸ் 2016 ஆம் ஆண்டு இரக்கத்தின் சிறப்பு விழாவுக்காக 2015 ஆம் ஆண்டு புனித கதவைத் திறந்து வைத்தார்.
https://www.youtube.com/embed/PvBIzxFKIqM?start=5