தமிழில் ஹிட் ஆன தெறி படத்தினை ஹிந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு நேற்று ரிலீஸ் ஆனது.
அட்லீ தயாரித்து இருக்கும் இந்த படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி ஆகியோர் நடித்து இருக்கின்றனர்.
திருமணம் முடிந்து ஹனிமூன் கூட செல்லாமல் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்துவிட்டார். தொடர்ந்து படக்குழு உடன் இருந்து பல நிகழ்ச்சிகளில் கீர்த்தி கலந்துகொன்டு வந்தார்.
நயன்தாரா மகன்கள் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! வைரல் புகைப்படங்கள்
முதல் நாள் வசூல்
முதல் நாளில் பேபி ஜான் படம் பெற்ற வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது. முதல் நாளில் 12.5 கோடி ரூபாய் மட்டுமே இந்த படத்திற்கு கிடைத்து இருக்கிறது.
சில வாரங்களுக்கு முன் வெளியான புஷ்பா 2 படம் தான் ‘பேபி ஜான்’ படத்திற்கு வில்லனாக மாறி இருக்கிறது.
நேற்று புஷ்பா 2 ஹிந்தியில் 20.7 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. அதற்கு புது ரிலீஸ் ஆன பேபி ஜான் ஈடுகொடுக்க முடியவில்லை. வரும் நாட்களில் அதிகரிக்கிறதா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.