நாட்டில் இடம்பெறும் திட்டமிட்ட குற்ற செயல்களை தடுத்து நிறுத்துவதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் விசேட குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்லும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களை தடுக்கும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
விசேட குழு
மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர்களும் இந்த குழுவில் தலைவர்களாக செயல்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் 20 பேரின் பெயரை உள்ளடக்கியதாக இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படை, விசேட பொலிஸ் பிரிவு மற்றும் குற்ற விசாரணை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை பிரதிநிதித்துவம் செல்லும் உயர் பொலிஸ் அதிகாரிகள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.