சந்திரமுகி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று சந்திரமுகி. பி. வாசு இயக்கத்தில் உருவான இப்படம் இண்டஸ்ட்ரி ஹிட்டானது.
ரீமேக் படமாக இருந்தாலும், தமிழில் ரஜினியின் ஸ்டைலில் வித்தியாசமாக இருந்தது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஜோதிகா, பிரபு, வடிவேலு, நாசர், நயன்தாரா, வினீத், மாளவிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 800 நாட்களை கடந்து சந்திரமுகி படம் திரையரங்கில் ஓடியதாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாபெரும் வெற்றியடைந்த டிமான்டி காலனி 2.. மூன்றாம் பாகத்திற்கான வேலையை ஆரம்பித்த இயக்குனர்
நடிகை பிரகர்ஷிதா
இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மனதில் இடம்பிடித்தவர் நடிகை பிரகர்ஷிதா. இவர் சந்திரமுகி படத்தில் பொம்மி எனும் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். ரஜினிகாந்துடனான இவருடைய காட்சி ரசிகர்களை கவர்ந்தது.
இந்த நிலையில், சந்திரமுகி படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை பிரகர்ஷிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவரா இது என கேட்டு வருகிறார்கள். இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்..