முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் (Raveendra Manoj Gamage) கமகே நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நியமனம் கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியமனக் கடிதம்
மகிந்த ராஜபக்சவினால் இதற்கான நியமனக் கடிதம் சட்டத்தரணி மனோஜ் கமகேவிடம் இன்று (30) கையளிக்கப்பட்டுள்ளது.
விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதேவேளை மகிந்த ராஜபக்சவிற்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.