முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஊடகவியலாளரின் கணவர் மர்ம மரணம்! ​பொலிஸாருக்கு எதிராக விசாரணை

பெண் ஊடகவியலாளர் ஒருவரின் கணவர் மர்மமாக உயிரிழந்துள்ள சம்பவத்தில் பொலிஸார் கடமை தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரபல சிங்கள ஊடகவியலாளரான ஶ்ரீயானி விஜேசிங்க தனது குடும்பத்துடன் தெஹிவளையில் வசித்து வருகின்றார்.

அவரது கணவர் ஏ.சமரஜீவ ஒரு முச்சக்கர வண்டி சாரதியாக தொழில் புரிகின்றார். இந்நிலையில், கடந்த புத்தாண்டு தினத்தில், சமரஜீவ காலையில் வழமை போன்று பணிக்கு சென்றுள்ளார்.  

தொலைபேசி அழைப்பு

எவ்வாறாயினும், பணி முடிந்து வீடு திரும்பாத காரணத்தினால் அவரது மனைவி தனது கணவருக்கு இரவில் தொலைபேசி அழைப்பு விடுத்த போதிலும், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

பலமுறை தொலைபேசி அழைப்பு மேற்கொண்டதைத் தொடர்ந்து, ஒரு கட்டத்தில் தொலைபேசி அழைப்புக்கு பொலிஸார் பதிலளித்துள்ளனர்.

ஊடகவியலாளரின் கணவர் மர்ம மரணம்! ​பொலிஸாருக்கு எதிராக விசாரணை | Journalist S Husband Dies Mysteriously

இதேவேளை, தெஹிவளை ஹில் வீதியில் உள்ள வீடொன்றில் வசித்து வரும் சட்டத்தரணி ஒருவர் தனது வீட்டின் முன் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக தெஹிவளை பொலிஸாருக்கு ஜனவரி 1ஆம் திகதி இரவு அழைப்பு விடுத்துள்ளார்.

இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

அந்த இடத்தில் விழுந்து கிடந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், பொலிஸ் அதிகாரிகள் குழு மீண்டும் சற்று நேரத்தில் அந்த இடத்திற்குத் திரும்புவதாகக் கூறிவிட்டுச் சென்றதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனை

எனினும், நீண்ட நேரமாகியும் பொலிஸார் திரும்பி வராத நிலையில், சம்பந்தப்பட்ட சட்டத்தரணி இது குறித்து மீண்டும் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு 1990 அம்பியூலன்ஸ் சேவையை சம்பவ இடத்திற்கு வரவழைத்து, கீழே விழுந்துகிடந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த நபர், களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வௌ்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

ஊடகவியலாளரின் கணவர் மர்ம மரணம்! ​பொலிஸாருக்கு எதிராக விசாரணை | Journalist S Husband Dies Mysteriously

மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை சனிக்கிழமை களுபோவில போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இறந்தவரின் முதுகில் பலத்த காயங்களும், தலையில் பலத்த இரத்தக்கசிவும் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சீசிடிவி காட்சிகள் மூலம் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டத்தரணியின் வாக்குமூலத்தின் பிரகாரம், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமை தவறினார்களா என்பதை கண்டறிய மேல்மாகாண தென் பகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கயங்க மாரப்பனவின் பணிப்புரையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகரினால் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.