நடிகர் விஷால்
சுந்தர்.சி இயக்கத்தில் நிறைய படங்கள் தயாராகி வெளியாகி வெற்றியும் பெற்றுள்ளது.
அப்படி அவரது இயக்கத்தில் தயாராகி 12 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்த படம் மதகஜராஜா. விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி என பலர் நடித்துள்ள இப்படம் வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.

படத்திற்கான புரொமோஷன் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ள நிலையில் அண்மையில் பத்திரிக்கையாளர்கள் சந்தித்து நடந்தது.
விஷால் கண்டிஷன்
பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விஷாலை கண்டு அனைவருமே ஷாக் ஆகிவிட்டார்கள். காரணம் மிகவும் ஒல்லியாக, ஒரு மைக்கை கூட பிடிக்க முடியாமல் நின்றுகொண்டிருந்தார்.
அவருக்கு என்ன ஆனது என்ன ஆனது என ரசிகர்கள் புலம்பி வர விஷால் கண்டிஷன் குறித்து அப்போலோ மருத்தவமனையில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில் விஷாலுக்கு வைரல் பீவர் தான், அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என எழுதப்பட்டுள்ளது.


