ஏ.ஆர்.ரகுமான்
மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ஏ.ஆர்.ரகுமான். ஹாலிவுட்டின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை கடந்த 2008ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக வென்றார்.
KGF பட புகழ் நடிகர் யாஷ் சொத்து மதிப்பு.. எத்தனை கோடி தெரியுமா?
இசையமைப்பாளராக களமிறங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 இடத்தை பிடித்து வலம் வருகிறார். தற்போது, இவர் தமிழில் தக் லைஃப், காதலிக்க நேரமில்லை, ஜீனி ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார்.
என்ன தெரியுமா?
இந்நிலையில் காதலிக்க நேரமில்லை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமான் அனிருத் குறித்து பேசிய விஷயங்கள் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ” அனிருத் இப்போது நன்றாக இசையமைத்து வருகிறார். அவரிடம் ஒரு வேண்டுகோள், க்ளாசிக்கல் இசையை படித்துவிட்டு அதில் நிறைய பாடல்களை நீங்கள் உருவாக்க வேண்டும். அப்படி நீங்கள் செய்தால் அந்த இசை இளம் தலை முறையினருக்கு அதிகம் போய் சேரும்” என்று கூறியுள்ளார்.