முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசியல் தீர்வு குறித்த அரசின் தீர்மானத்திற்கு சிங்கள மக்களும் ஆதரவு : சிறீதரன் எம்.பி

அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

நேற்று (09) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வவாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமை கவனத்திற்குரியது.

சிங்கள மக்களும் ஆதரவு

இந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

அரசியல் தீர்வு குறித்த அரசின் தீர்மானத்திற்கு சிங்கள மக்களும் ஆதரவு : சிறீதரன் எம்.பி | Sinhalese Support Anura Govt S Political Solution

தீர்வு திட்டத்தில் அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள் ஏனெனில் சிங்கள மக்களும் தற்போது நேர்மனப்பான்மையில் உள்ளார்கள்.

அத்துடன் மீள் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் கடந்த காலங்களில் முறையாக கிடைக்கப் பெறவில்லை.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு 1 முதல் 3 இலட்சம் ரூபா வரையில் மீள்குடியேற்ற தொகை ஆரம்பத்தில் வழங்கப்பட்டது. இருப்பினும் ஒருசிலருக்கு இந்த நிதி இன்று வரை கிடைக்கப் பெறவில்லை.

மீள்குடியேற்ற தொகை

கிளிநொச்சி மாவட்டத்தில் 38 ஆயிரம் தமிழர்கள் மீள் குடியமர்த்தப்பட்ட நிலையில் அவர்களில் 11,790 பேருக்கு மீள்குடியேற்ற தொகை வழங்கப்பட்டது. மிகுதி 26,209 பேருக்கு இன்றும் அந்த தொகை வழங்கப்படவில்லை.

அரசியல் தீர்வு குறித்த அரசின் தீர்மானத்திற்கு சிங்கள மக்களும் ஆதரவு : சிறீதரன் எம்.பி | Sinhalese Support Anura Govt S Political Solution

மட்டக்களப்பு – வாகரை, வவுனியா – வடக்கு, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மடு, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு இன்றுவரை இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.

மீன் குடியமர்த்தப்பட்ட மக்கள் இந்த தொகையை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்ப படிவங்களை நிரப்பியே அதிகளவில் நிதியை செலவு செய்துள்ளார்கள்.

ஆகவே இந்த அரசாங்கம் இவ்விடயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும். கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக இந்த நிதியை பெற்றுக்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.” தெரிவிக்க வேண்டும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.