ப்ரீத்தி சஞ்சீவ் – கீர்த்தி
நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி அவருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். கீர்த்தி சுரேஷ் என் தங்கைப்போல் என்னிடம் பழகுவார், என் கணவரிடம் அதிகமாக பேசமாட்டார்.அவர் காதலிப்பதாக அவரின் பிறந்தநாளன்று தான் கூறினார்.
பெற்றோர் சம்மதத்துக்காக இருவரும் காத்திருந்து தான் திருமணம் செய்தனர். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 400 பேர் மட்டுமே கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு வந்தனர்.
மஞ்சள் தாலி தெரியும்படி கீர்த்தி சுரேஷ் வந்ததை பலரும் விமர்சித்தார்கள், ஏன் நயன் தாரா அப்படி வந்தால் தவறில்லை, கீர்த்தி வந்தால் தவறா? என்றும் கூறியுள்ளார். மேலும் திருமணத்திற்கு விஜய் வந்ததையும் விமர்சனம் செய்தார்கள் என்று ப்ரீத்தி சஞ்சீவ் தெரிவித்திருக்கிறார்.