அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித், கார் மற்றும் பைக் ரேஸில் மிகவும் ஆர்வம் கொண்டவர் என்பதை அனைவரும் அறிந்த விஷயம் தான். படங்களிலும் கார் மற்றும் பைக்கில் சாகசங்கள் செய்து அனைவரையும் மிரள வைத்துள்ளார். விபத்துகளிலும் சிக்கியுள்ளார்.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கூட கார் விபத்து நடந்தது. அது குறித்து வீடியோ வெளிவந்து அனைவருக்கும் அதிர்ச்சியை எற்படுத்தியது. 2003 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் அஜித் சர்வதேச கார் ரேஸ்களில் கலந்துகொண்டார்.
வந்தது ரிசல்ட்.. அஜித் ரேஸ் டீம் எந்த இடம் பிடித்தது பாருங்க! Qualification round முடிவுகள்
பின் 2010ஆம் ஆண்டு எப்ஐஏ ஃபார்முலா 2 ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். அதன்பின், அவருக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டது. இதனால் கார் ரேசில் கலந்து கொள்ளமல் கடந்த சில ஆண்டுகளாக இருந்தார்.2
24 மணி நேர கார் ரேஸ்
இந்த நிலையில், மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து கார் ரேஸில் ஈடுப்பட்டுள்ளார். ஆம், துபாயில் நடக்கும் 24 மனி நேர கார் ரேஸில் தனது குழுவுடன் கலந்துகொண்டுள்ளார் அஜித். இதற்காக பயிற்சி எடுக்கும்போது சமீபத்தில் அஜித்துக்கு ரேஸ் ட்ராக்கில் விபத்து எற்பட்டது என்பது குறிபிடத்தக்கத்து.
பந்தயத்தில் கலந்துகொண்டுள்ள அஜித்தின் கார் நம்பர் 901 ஆகும். துபாயில் நடக்கும் இந்த போட்டி இந்த மதியம் 1 மணிக்கு துவங்கி, நாளை மதியம் 1 மணி வரை நடக்கும். இடைவிடாமல், 24 மணி நேமும் காரை ஓட்டவேண்டும். இந்த ரேஸில் அஜித் மற்றும் அவருடன் 3 ரேஸ்ர்கள் பயணிப்பார்கள். இதில் அஜித் தான் கேப்டன் ஆவார்.
24 மணி நேரம் நடக்கும் இந்த கார் ரேஸில், கேப்டனாக இருக்கும் அஜித் 14 மணி நேரம் கார்ரை ஒட்டவேண்டும். 24 மணி நேரத்தில் எவ்வளவு Lap-ஐ கடகிறார்களோ, அதன் அடிப்படையில் தான் புள்ளிகள் வழங்கப்படும். நேற்று நடைபெற்று தகுதியடையும் சுற்றில் தனது குழுவுடன் டாப் 10ல் 7வது இடத்தை அஜித் பிடித்தார். மேலும் துவங்கவுள்ள இந்த 24 மணி நேர கார் ரேஸில் அஜித் வெற்றிப்பெறுவார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.