கார் ரேஸில் அஜித்
நடிகர் அஜித் இன்று துபாயில் நடைபெறும் கார் ரேஸில் தனது குழுவுடன் பங்கேற்றுள்ளார். 24 மணி நேரம் நடைபெறும் இந்த கார் ரேஸ் தற்போது துவங்கியுள்ள நிலையில், நாளை மதியம் 1 மணிக்கு தான் நிறைவு பெரும் என அறிவித்துள்ளனர்.
இந்த 24 மணி நேரத்தில் குழுவின் கேப்டனாக இருக்கும் அஜித் மட்டுமே 14 மணி நேரம் காரை ஓட்டவேண்டுமாம். 24 மணி நேரத்தில் எவ்வளவு Lap-ஐ கடகிறார்களோ, அதன் அடிப்படையில் தான் புள்ளிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அஜித் பங்குபெறும் 24 Hours கார் ரேஸ் தொடங்கியது.. Live Video
கார் ரேஸ் துவங்கவிருந்த நிலையில், அஜித்தை காண வந்திருந்த ரசிகர்களின் கோஷம் அரங்கை அதிரவைத்தது. மேலும் தனக்கு ஆதரவளிக்க வந்த ரசிகர்களை அஜித் சந்தித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தனது ரசிகர்களின் மீது அன்கண்டிஷனல் லவ் இருப்பதாகவும் அஜித் தெரிவித்தார்.
ஆலுமா டோலுமா
இந்த நிலையில், கார் ரேஸ் நடக்கும் இடத்தில் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடல் ஒலித்தது. அந்த வீடியோவை இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ..
😍😍😍🕺💃🕺💃 Ak sir #Ajithkumar #AjithKumarRacing #24hdubai #AKRacing #DubaiRaceWeekend #Racing @SureshChandraa pic.twitter.com/VrYQxIoXEr
— Anirudh Ravichander (@anirudhofficial) January 11, 2025