அரசாங்க சேவையை மறுசீரமைப்பது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார்.
அதன் ஒரு கட்டமாக அரசாங்க சேவையின் முக்கிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அண்மையில் சந்திப்பொன்றை நடத்தி, இது தொடர்பில் டில்வின் சில்வா கலந்துரையாடியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் அரசாங்க சேவையின் பலம்மிக்க 18 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
மறுசீரமைப்புக்கான திட்டங்கள்
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைத் திட்டங்களை தங்குதடையின்றி முன்னெடுக்கும் வகையில் அரசாங்க சேவையில் மறுசீரமைப்பொன்றை ஏற்படுத்துதல், முக்கிய பதவிகளில் தங்களுக்கு நெருக்கமானவர்களை நியமித்தல் போன்ற விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
குறித்த செயற்திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக கலந்துரையாடலில் பங்கெடுத்திருந்த தொழிற்சங்கப் பிரநிதிகளும் உறுதியளித்துள்ளனர்.
அதன் பிரகாரம், எதிர்வரும் நாட்களில் அரசாங்க சேவையில் பாரிய மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை டில்வின் சில்வா வகுத்துக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.