இலங்கையில் க்ளீன் ஸ்ரீலங்கா(Clean Sri lanka) வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இலங்கையில் வேறு எந்த துறையில் மாற்றங்கள் வர வேண்டும் என மக்கள் எண்ணுகிறார்கள் என லங்காசிறியின் மக்கள்குரல் நிகழ்ச்சியில் பலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இலங்கையின் வைத்திய துறையில் பாரிய மாற்றம் வர வேண்டும் என்று பொதுமகனொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையின் கல்வித்துறை நிகழ்நிலை கல்வியில் தங்கியிருப்பதால் மாணவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகனங்களில் இருக்கும் அலங்கார பொருட்களை மட்டும் அகற்றாமல் வாகனத் தரிப்பிடங்களின் மீதும் கவனம் செலுத்துமாறு குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொதுமக்கள் முன்வைத்த விமர்சனங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.