முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara), தான் கைது செய்யப்படுவதில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக முன்பிணை கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த முன்பிணை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்பிணை கோரி மனுத்தாக்கல்
அதுதொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு கட்டமாக எதிர்வரும் நாட்களில் வாக்குமூலம் ஒன்றை வழங்க வருமாறு கடந்த அரசாங்கத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக கடமையாற்றிய மனுஷ நாணயக்காரவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வாக்குமூலம் வழங்கச் செல்லும் போது தான் கைது செய்யப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில் முன்பிணை கோரும் மனுவொன்றை மனுஷ நாணயக்கார நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.