சைஃப் அலிகான்
நேற்று (ஜனவரி 16) பாலிவுட் சினிமாவை உலுக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது நேற்று அதிகாலை பிரபல நடிகர் சைஃப் அலிகான் வீட்டிற்குள் ஒரு திருடன் புகுந்துள்ளார்.
அவர் சைஃப் அலிகான் மகன்களின் அறைக்குள் செல்ல அவரை வீட்டில் பணிபுரிந்தவர்கள் தடுக்க முயன்றுள்ளனர். அப்போது சைஃப் அலிகான் சென்று தனது மகன்களை காப்பாற்ற முயற்சி செய்ய அந்த திருடன் சைஃப் அலிகானை 6 முறை மோசமாக கத்தியால் குத்தியுள்ளார்.
இதனால் ரத்தக் காயம் அடைந்த சைஃப் அலிகானை அவரது மகன் இப்ராஹிம் கார் அந்த நேரத்தில் இல்லாததால் ஆட்டோ ரிக்ஷாவில் தனது அப்பாவை அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைஃப் அலிகானின் முதுகில் இருந்து 2.5 Inch கத்தியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
தற்போது அவர் அபாய கட்டத்தை எட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மும்பை போலீசார் சைஃபை தாக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
சைஃப் அலிகான் வீட்டிற்கு சென்ற திருடன் முதலில் அவர்களது மகன்களை தான் முதலில் குறிவைத்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.