முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளீன் சிறிலங்கா திட்டம் குறித்து சிறிநேசன் எம்.பி வெளியிட்ட தகவல்

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற
மனித குலத்திற்கு எதிரான பல செயற்பாடுகளை இந்த கிளீன் சிறிலங்கா தண்டிப்பதாக
இருக்க வேண்டும் என  இலங்கைத் தமிழரசுக்
கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் உறுப்பினர்களில் தமிழர்கள் உள்வாங்கப்படவில்லை என்பது ஒரு வேதனையான விடயம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் (Batticaloa) நேற்று (16.01.2025) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட
பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு
குறிப்பிட்டார்.

தமிழர்கள் உள்வாங்கப்படவில்லை

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கிளீன் சிறிலங்கா என்பது சிறிய விடயங்களில் கவனம் செலுத்தாமல் இலஞ்சம் ஊழல்
அதிகார துஷ்பிரயோகம், ஆட்கடத்தல், கொலைகள், மனித குலத்திற்கு எதிரான
செயற்பாடுகள், என்பவற்றை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

கிளீன் சிறிலங்கா திட்டம் குறித்து சிறிநேசன் எம்.பி வெளியிட்ட தகவல் | Anura Govt Clean Sri Lanka Project Srinesan Mp

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பல செயற்பாடுகளை இந்த கிளீன் சிறிலங்கா தண்டிப்பதாக
இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் நடைமுறைப்படுத்தும்
உறுப்பினர்களில் தமிழர்கள் உள்வாங்கப்படவில்லை என்பது ஒரு வேதனையான விடயம்
இவ்வாறான குறைபாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

தமிழ் மக்கள் நம்புவார்கள்

கடந்த காலத்தில் இடம்பெற்ற இனவாதம், மதவாதம் அற்ற செயற்பாடுகள் இந்த
திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கிளீன் சிறிலங்கா திட்டம் குறித்து சிறிநேசன் எம்.பி வெளியிட்ட தகவல் | Anura Govt Clean Sri Lanka Project Srinesan Mp

75 ஆண்டுகள் புரையோடி போன இந்த
விடயங்களை உடனடியாக தீர்ப்பது என்பது சாத்தியமற்ற விடயம். இருப்பினும்
அரசாங்கம் பக்கச்சார்பின்றி தமது செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

புதிய அரசாங்கத்தை மக்கள் ஓரளவு நம்புகின்றார்கள், கடந்த காலங்களில் ஏற்பட்ட
குறைபாடுகளை தவிர்த்து செயற்பட்டால் இவர்களை தமிழ் மக்கள் நம்புவார்கள்” என
அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.