பிக் பாஸ் 8
சின்னத்திரையில் பிரம்மாண்ட முறையில் நடைபெறும் நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழில் கடந்த 7 சீசன்களாக இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், 8வது சீசனில் இருந்து விலகினார்.
அவருக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
மக்கள் மத்தியில் விஜய் சேதுபதிக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. 24 போட்டியாளர்கள் பிக் பாஸ் 8ல் கலந்துகொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முத்துக்குமரன், சௌந்தர்யா, விஜே விஷால், பவித்ரா மற்றும் ரயான் ஆகிய ஐந்து போட்டியாளர்கள் தான் பைனலிஸ்ட்.
இதில் முத்துக்குமரனுக்கு அதிக வாக்குகள் உள்ளது என்றும், அவர் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
பிக் பாஸ் சென்று வந்தபின் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்.. முக்கிய பிரபலம் பேச்சால் அதிர்ச்சி
டைட்டில் வென்ற போட்டியாளர்கள் லிஸ்ட்
இந்த நிலையில், இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களில் யார்யாரெல்லாம் டைட்டில் வின்னர் ஆகியுள்ளனர் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
- சீசன் 1 – ஆரவ்
- சீசன் 2 – ரித்விகா
-
சீசன் 3 – முகேன் ராவ்
- சீசன் 4 – ஆரி அர்ஜுனன்
-
சீசன் 5 – ராஜு
- சீசன் 6 – அஸீம்
-
சீசன் 7 – அர்ச்சனா
-
பிக் பாஸ் ultimate – பாலாஜி முருகதாஸ்