முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒரே நாளில் 2500 பேருக்கு பொது மன்னிப்பு : பைடனின் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவின் (United States) தற்போது அதிகாரத்தில் உள்ள ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) 2500 சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) வெற்றி பெற்ற நிலையில் வரும் திங்கள்கிழமை (20.01.2025) பதவியேற்க உள்ளார்.

எனவே தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தனது அதிகாரத்தை முடிந்தவரை பயன்படுத்தி முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.

பொது மன்னிப்பு

குற்ற வழக்கில் சிக்கிய தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு வழங்கியது, ரஷியா மீது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி கொடுத்தது உள்ளிட்டவை அதில் அடங்கும். 

ஒரே நாளில் 2500 பேருக்கு பொது மன்னிப்பு : பைடனின் அதிரடி நடவடிக்கை! | Joe Biden Pardons 2 500 Prisoners In One Day

இந்நிலையில் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் இருக்கும் ஜோ பைடன் நேற்று (17.01.2024) ஒரே நாளில் 2500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

வன்முறையற்ற சாதாரண போதைப் பொருள் குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுமாா் 2,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோ பைடன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நாளில் இத்தனை பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

டொனால்ட் டிரம்ப்

வன்முறையில் ஈடுபடாதபோதிலும் மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக பைடன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

முன்னதாக அமெரிக்காவின் மத்திய நீதிமன்றங்களால் 37 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த மாதம் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார்.

ஒரே நாளில் 2500 பேருக்கு பொது மன்னிப்பு : பைடனின் அதிரடி நடவடிக்கை! | Joe Biden Pardons 2 500 Prisoners In One Day

அவர்கள் செய்த கொலை கண்டிக்கத்தக்கதாக இருப்பினும் மத்திய அளவில் மரண தண்டனை விதிக்கப்படுவது தவறு என்பதால் அவா்களுக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதாக பைடன் தெரிவித்திருந்தார்.

கடந்த 2003 முதல் மத்திய நீதிமன்றதனால் விதிக்கப்படும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில் 2016 இல் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

வரும் ஜனவரி 20 முதல் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக உள்ளார் என்பதால் அவரிடம் இருந்து மரண தண்டனை கைதிகளை பாதுகாக்க ஜோ பைடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.