இலங்கையை வளர்ச்சி நோக்கி அழைத்துச் செல்வதற்காக வெளிநாடுகளின் உதவியை நாடும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை(anura kumara dissanayake) எதிர்க்கட்சி என்ற முறையில் தான் ஆதரிப்பதாகவும், ஜனாதிபதியின் சீனப் (china)பயணம் குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பகா(gampaha) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா(Harshana Rajakaruna.) தெரிவித்தார்.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அநுர குமார திசாநாயக்க சீனாவிற்கு விஜயம்
“ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீனாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நம்பும் அணிசேரா அணுகுமுறையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பின்பற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும், இலங்கையை(sri lanka) வளர்ச்சி நோக்கி அழைத்துச் செல்ல ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இப்போது வெளிநாடுகளின் உதவியை நாட வேண்டியுள்ளது.
எதிர்க்கட்சியாக, நாங்கள் அதை ஆதரிக்கிறோம். “ஜனாதிபதியின் திட்டத்திலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என தெரிவித்தார்.