பிக் பாஸ் 8ம் சீசன் நேற்றோடு நிறைவு பெற்றது. பைனலில் 5 போட்டியாளர்கள் இருந்த நிலையில் டைட்டிலை முத்துக்குமரன் ஜெயித்தார். அவருக்கு 40,50,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தை சௌந்தர்யா பிடித்தார்.
கடந்த 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஆனால் அவர் திடீரென வெளியேரிய பிறகு விஜய் சேதுபதி தொகுப்பாளராக வந்தார்.
விஜய் சேதுபதி மீது ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. சில போட்டியாளர்களுக்கு ஆதரவாக பேசுகிறார், சில போட்டியாளர்களை பேசவே விடுவதில்லை என பலரும் அவர் மீது குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
அடுத்த சீசன் தொடர்வாரா?
கடந்த 7 சீசன்களிலும் இல்லாத வகையில் 8வது சீசனுக்கு தான் அதிகம் பார்வைகள் மற்றும் வாக்குகள் கிடைத்து இருக்கிறது என விஜய் டிவி தரப்பு கூறி இருக்கிறது.
மேலும் விஜய் சேதுபதி தான் அடுத்த சீசனிலும் தொகுப்பாளராக தொடர்வார் எனவும் அறிவித்துவிட்டனர்.