செல்வத்தின் கடவுள் என்று அழைக்கப்படும் குபேரரை எந்த திசையில் வைத்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மகாலக்ஷ்மியின் செல்வங்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்து நமக்குத் தருவதே குபேரரின் செயல் என கூறப்படுகின்றது.
இவ்வாறு நன்மை செய்யும் குபேரரை வணங்குவதால் வீட்டில் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி ஆகியவை பெருகும் என்பது நம்பிக்கையாகும்.
குபேரன் சிலையை வைக்கும் திசை
வீடுகளில் குபேரன் சிலையை சிலர் அலங்காரத்திற்காக வைத்திருப்பர். சிலர் கடவுளாக குபேரன் சிலையினை பூஜை அறையில் வைத்து வழிபடுவர்.
அத்துடன், அதிர்ஷ்டத்தை ஈர்க்கவும், துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்கவும் குபேரன் சிலையை வைப்பதாகவும் கூறப்படுகின்றது.
குபேரன் சிலையை வைக்கும் திசைப்படி பலன்கள் கிடைக்கும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில், குபேரனின் திசை வடக்கு என்பதால், அந்த திசையை நோக்கி பணப்பெட்டியைத் திறந்தால், அவருடைய ஆசியைப் பெற்று செல்வம் பெருகும் என்பதுடன் சிரிக்கும் குபேர சிலையை வீட்டில் வைத்தால் செல்வமும் செழிப்பும் உண்டாகும்.
குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தீர, வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலவ, சிரிக்கும் குபேரன் சிலையை வீட்டின் கிழக்கு திசையில் வைக்கலாம்.
அதேபோன்று குடும்பத்தில் சந்தோஷம் மற்றும் ஒற்றுமை நிலவ, குபேர சிலையை வடகிழக்கு திசையில் வைப்பது நல்லது.
குபேரன் சிலையைப் படுக்கும் அறை அல்லது உணவு உண்ணும் இடத்தின் தென்கிழக்கு திசையில் வைப்பதால், எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் என்பதுடன் வீட்டின் வருமானம் அதிகரிக்கும்.
கிடைக்கும் பலன்கள்
இதேவேளை, மாணவர்கள் படிக்கும் இடத்தில் குபேரன் சிலையை வைத்திருப்பது கல்வித்திறனை மேம்படுத்த உதவுவதுடன் குபேரன் சிலையை பார்க்கும்போது, மாணவர்களுக்கு ஒருவித ஆர்வம் ஏற்படும்.
மேலும், மாணவர்கள் குபேரன் சிலையை வழிபடுவது மன அழுத்தத்தை குறைப்பதுடன் கவனச்சிதறலை குறைந்து கற்றலில் கவனம் செலுத்த உதவும்.
அதேநேரம் வேலை செய்யும் இடத்தில் குபேரன் சிலையை வைத்திருப்பது தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை அடைய உதவும் என்பதுடன் தொழில் தொடர்பான தடைகளை நீக்கும்.
இது போன்ற பலன்களை உங்கள் வாழ்க்கையில் அனுபவிக்க இன்றே குபேரன் சிலையை வீட்டில் சரியான திசையில் வைத்து வழிப்படுங்கள்.