முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படாது : அடித்துக்கூறும் விஜித ஹேரத்

இலங்கையில் எதிர்காலத்தில் எவ்வகையிலும் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படாது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

இன்று (18) நடைபெற்ற விசேட நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

எரிவாயு இறக்குமதி செய்வதற்காகக் கேள்வி மனு நடைமுறை ஊடாகப் புதிய நிறுவனமொன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனத்தின் முதலாவது எரிவாயுக் கப்பல் ஜனவரி மாதம் 5ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையும் எனவும் சுட்டிக்காட்டினார்.

குற்றஞ்சாட்டிய சாமர சம்பத்

புதிய நிறுவனத்திற்கு எரிவாயு டெண்டர் வழங்கப்பட்டதன் காரணமாக, மார்ச் மாதமாகும் போது நாட்டில் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) இன்று (18) காலை நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.

இலங்கையில் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படாது : அடித்துக்கூறும் விஜித ஹேரத் | There Will Be No Gas Shortage In Sri Lanka

இதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத் “கடந்த நாட்களில் ஓமான் நிறுவனமே எரிவாயுவை விநியோகித்தது. ஓமான் நிறுவனத்தை விட 15 டொலர் சதங்கள் குறைவாகக் கோரி புதிய நிறுவனமொன்று டெண்டருக்கு விண்ணப்பித்தது.

அதற்கமைய டெண்டர் சபையானது அந்தப் புதிய நிறுவனத்திற்கு டெண்டரை வழங்கியது. அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தரத்தைப் பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 5ஆம் திகதியாகும் போது முதலாவது கப்பல் இலங்கைக்கு வரும். எவ்வகையிலும் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படாது. பொய்யாகப் பயமுறுத்த வேண்டாம். ஒரு நாடாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து எழுந்து நிற்போம். அந்த உறுதிப்பாடு எம்மிடம் உள்ளது.” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.