இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
முதல் நூறு நாட்கள்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நூறு நாட்களை பூர்த்தி செய்துள்ளதாகவும் எந்தவொரு அரசாங்கத்தினதும் முதல் நூறு நாட்கள் முக்கியமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தினை ஆட்சி பீடம் ஏற்றிய மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் குறுகிய காலத்தில் நிறைவேற்றுதாக உறுதியளித்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பயணம்
முதல் நூறு நாட்களில் இந்த அரசாங்கத்தின் பயணம் வெற்றியளிக்கவில்லை என்பது தெளிவாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் பல்வேறு தேவதை கதைகளை கூறினாலும், இந்த அரசாங்கத்தின் இதுவரை கால பயணம் தோல்வியடைந்துள்ளது என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சில அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரைகளை பார்க்கும் போது அவர்களும் திருப்தி அடையவில்லை என்பது புலனாகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.