தமிழரசுக் கட்சிக்குள்ளேயே இருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக சதி செய்யும் அளவிற்கு கட்சிக்குள்ளான முரண்பாடுகளானது படிப்படியாக வளர்ந்துள்ளதாக பிரித்தானிய (United Kingdom) அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (T.Thibakaran) விசனம் வெளியிட்டுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் நலன் குறித்தும் மற்றும் தேவை குறித்தும் கருத்துக்களை முன்வைக்கும் நிலை மாறி தற்போது தனிப்பட்ட முரண்பாடுகளை தீர்த்துகொள்வதற்கான களம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சிக்குள் நடக்கும் முரண்பாடுகளை நாடாளுமன்றம் வரை கொண்டு செல்லும் அளவிற்கு ஒரு துர்பாக்கிய நிலைக்கு கட்சி தள்ளப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் கட்சியின் கரிசணை மிகவும் அவசியமான ஒன்றாகவுள்ளது.
தமிழ் மக்களுக்கான கோரிக்கைகளை இனி எதிர் தரப்பினரிடம் முன்வைக்க வேண்டிய ஒரு நிலைமைக்கு கட்சி தள்ளப்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டிய அவர் கட்சி தொடர்பிலும், உள்ளக மோதல், கட்சியின் எதிர்கால நடவடிக்கை மற்றும் தற்போதைய நிலை குறித்தும் தெரிவித்த விரவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
https://www.youtube.com/embed/n_dfKVXaZwo