வெங்கட் பிரபு
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் கோட்.
இப்படம் உலகளவில் ரூ. 440 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. கோட் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் இவர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது அப்படம் நடக்கவில்லை என்கின்றனர்.
கேஜிஎப் யாஷ், நயன்தாரா நடிக்கும் படத்திற்கு வந்த சிக்கல்.. அதிரடி காட்டிய அரசு
மேலும் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் எந்த ஹீரோவுடன் என்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால், சத்யஜோதி தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படம் பண்ணபோகிறார் என கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
அழகிய குடும்ப புகைப்படம்
இயக்குநர் வெங்கட் பிரபு கடந்த 2001ஆம் ஆண்டு ராஜலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், வெங்கட் பிரபு தனது மனைவி மற்றும் மகன்களுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..