முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகள் : அமைச்சர் சந்திரசேகரனிடம் இடித்துரைப்பு

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடற்றொழில் அமைச்சருக்கு எடுத்துரைத்ததுடன் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது வலியுறுத்தினார்.

வடபகுதியில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில்

குறிப்பாக வடபகுதியில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளால் கடல் வளங்கள் அழிக்கப்படுதல் மற்றும், வடபகுதிகடற்றொழிலாளர்களின் மீன்பிடி உபகரணங்கள் சேதமாக்கப்படுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்டது.

வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகள் : அமைச்சர் சந்திரசேகரனிடம் இடித்துரைப்பு | Northern Fishermens Problems

எனவே கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் இப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறும், அவ்வாறு நடவடிக்கை எடுக்கத்தவறின் கடற்றொழிலாளர்கள் பாரிய போராட்டங்களில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்படுமெனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் கடற்றொழில் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சருக்கான மகஜர்

அத்தோடு முல்லைத்தீவுமாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைகளை நிவர்த்திசெய்துதருமாறும் இதன்போது பேசப்பட்டுள்ளதுடன், அதுதொடர்பிலான மகஜரும் நாடாளுமன்ற உறுப்பினரால் கடற்றொழில் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகள் : அமைச்சர் சந்திரசேகரனிடம் இடித்துரைப்பு | Northern Fishermens Problems

மேலும் முல்லைத்தீவு கடற்றொழில் சங்கங்களின் சமாசத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கையளிக்கப்பட்ட கடற்றொழில் அமைச்சருக்கான மகஜர்களும் இதன்போது கடற்றொழில் அமைச்சரிடம் சேர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தம்மால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலும், கையளிக்கப்பட்ட மகஜர்கள் தொடர்பிலும் கவனம்செலுத்துவதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.