இந்திரஜா ஷங்கர்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கலக்கிய பிரபலங்களில் ஒருவர் தான் ரோபோ ஷங்கர்.
முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிஸியாக இருந்துவந்த ரோபோ ஷங்கர் இடையில் உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே முடங்கினார். இப்போது குணமாகி மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார்.
இவரது மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்தார் இந்திரஜா. விஜய்யின் பிகில் படத்தில் நடித்தவர் பின் சில படங்களில் நடித்தார்.
குழந்தை
இந்திரஜாவிற்கு, கார்த்திக் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடந்தது.
சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் செய்தியை இந்திரஜா அறிவித்தும் இருந்தார்.
இந்த நிலையில் இந்திரஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை கையில் ஏந்தியதும் அவரது கணவர் ஆனந்த கண்ணீர் விடுகிறார், ரோபோ ஷங்கர் விளையாடுகிறார்.
இதோ குழந்தையை வாங்கும் போது இந்திரஜா குடும்பத்தினரின் எமோஷ்னல் வீடியோ,
View this post on Instagram