முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன் : 20 பேரை தேடும் பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இளைஞனை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சினை காரணமாக இணுவில் பகுதியை சேர்ந்த
இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து, சித்திரவதை
புரிந்து கட்டி வைத்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சித்திரவதை மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் போது , தாக்குதலாளிகள் அவற்றை
கையடக்க தொலைபேசியில் காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளதாக குற்றம சுமத்தப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணை

குறித்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் யாழ் . போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்று வருகின்றார்.

யாழில் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன் : 20 பேரை தேடும் பொலிஸார் | Youth Tortured Attacked Police Searching 20 Mens

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில்
சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்து விசாரணைகளின் பின்னர் யாழ் ,
நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் 03ஆம் திகதி
வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

தேடுதல் நடவடிக்கை

அதேவேளை கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்
ஏனைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், இளைஞனை சித்திரவதைக்கு
உட்படுத்தப்பட்ட போது , எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தமக்கு
கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் , அவற்றின் அடிப்படையிலும் சந்தேக நபர்களை அடையாளம்
கண்டு கொண்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன் : 20 பேரை தேடும் பொலிஸார் | Youth Tortured Attacked Police Searching 20 Mens

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் சுமார் 20 பேர் வரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது
செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.