விண்ணைத்தாண்டி வருவாயா
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் காதலர்களை கவரும் வண்ணம் 2009 – ம் ஆண்டு வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா.
படத்தின் கதை, சிம்பு-த்ரிஷா கெமிஸ்ட்ரியை தாண்டி ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் இப்படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் செம ஹிட் தான்.
ரஜினியின் ஜெயிலர் 2 படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா?
சிறந்த விமர்சனத்தை பெற்ற இப்படம், பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பி வசூலை குவித்தது. இப்படத்தில் சிம்பு ஹீரோவாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருப்பார்.
நடிக்கவிருந்தது இவரா?
ஆனால், இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சிம்பு இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், முதலில் இப்படத்தில் நடிக்க கெளதம் மேனனின் பர்ஸ்ட் சாய்ஸ் ஆக இருந்தது சிம்பு இல்லை.
முதலில் அவர் அணுகியது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை தானாம். ஆனால் மகேஷ் அந்த சமயத்தில் காதல் படம் வேண்டாம் என தவிர்த்துவிட்டாராம்.
இதனால், சிம்பு நடித்துள்ளார். மேலும், விடிவி கணேஷ் நடித்த வேடத்தில் முதலில் விவேக் தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் அவருக்கு கால்ஷீட் இல்லாத காரணத்தினால் விடிவி நடித்தாராம்.