முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கெட்ட வார்த்தையில் அநாகரிகமாக பேசிய இயக்குநர் மிஸ்கின்.. கடுமையாக எச்சரித்த பிரபல நடிகர்

அநாகரிகமாக பேசிய மிஸ்கின் 

கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குநர் மிஸ்கின், பாட்டில் ராதா எனும் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பங்கேற்றார். இதில் அவர் எல்லைமீறி தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். இதற்கு மேடையில் இருந்தவர்களும், எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக சிரித்திக்கொண்டு இருந்தனர்.

கெட்ட வார்த்தையில் அநாகரிகமாக பேசிய இயக்குநர் மிஸ்கின்.. கடுமையாக எச்சரித்த பிரபல நடிகர் | Actor Aruldoss Talk About Mysskin Indecent Speech

இந்த நிலையில், 2k லவ் ஸ்டோரி படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பேசிய நடிகர் அருள்தாஸ், மிஸ்கின் அநாகரிகமான பேச்சை கண்டித்து பேசியுள்ளார்.

எச்சரித்த நடிகர் அருள்தாஸ்

இதில் “சமீபத்தில் பாட்டில் ராதா படத்தின் விழா மேடையில் இயக்குநர் மிஸ்கின் பேசியது மிகவும் வல்கரா இருந்தது. இயக்குநர் என்றால் எது வேண்டுமானலும் பேசலாம் என்பது இல்லை. அந்த வீடியோவை பார்த்தேன், அவர் பேசியது நமக்கு தலைகுனிவாக இருந்தது. இந்திய சினிமாவில், தமிழ் சினிமா மதிக்கக்கூடிய இடத்தில் இருக்கிறது.

இயக்குநர்கள் மட்டுமல்ல, மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் இந்திய அளவில் மதிக்கக்கூடிய இடங்களில் உள்ளனர். அதுவும் இந்த மேடை, பிரசாத் லேப் மேடை பல ஜாம்பவான்களை பார்த்த மேடை. இந்திய முழுவதும் உள்ள பலரும் இந்த மேடையில் அமர்ந்து பேசிவிட்டு சென்றுள்ளனர். எவ்வளவு விழாக்கள், இசை வெளியிட்டு விழா, ட்ரைலர் வெளியீடு, வெற்றிவிழா போன்ற பல விழாக்கள் இங்கு நடந்துள்ளது.

நம் பத்திரிகையாளர்கள் நண்பர்கள் எவ்வளவு பேர் இங்கு இருக்குறீர்கள், அந்த இடத்தில் வந்து கெட்ட வார்த்தை பேசுவது என்பது, பேசுங்க வெளியே பேசிக்கோங்க. மேடை நாகரிகம் என்று இல்லையா? என்ன வேணும்னாலும் பேசுறதா? நிறைய புத்தகங்களை படித்து இருக்கேன் என சொல்லறீங்க, உலக படங்களை பார்த்து இருக்கேன் என சொல்லறீங்க, அப்பறோம் என்ன அறிவு இருக்கு உங்களுக்கு. குறைந்தபட்ச நாகரிகம் வேண்டாமா, ஒரு மேடையில் பேசும் பேச்சா இது.

கெட்ட வார்த்தையில் அநாகரிகமாக பேசிய இயக்குநர் மிஸ்கின்.. கடுமையாக எச்சரித்த பிரபல நடிகர் | Actor Aruldoss Talk About Mysskin Indecent Speech

குழந்தையை தூக்கியதும் கண்ணீர் விட்ட ரோபோ ஷங்கர் மருமகன்! வைரலாகும் வீடியோ

குழந்தையை தூக்கியதும் கண்ணீர் விட்ட ரோபோ ஷங்கர் மருமகன்! வைரலாகும் வீடியோ

உங்களுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு, எனக்கு ஒரு பெண்கள் இருக்கு, மேடை நாகரிகம் என்பது மிகவும் முக்கியம். அனைவரையும் வாடா, போடா என அழைக்கிறாரு. இது இப்போ பேசணும்னு நான் நினைக்கல. மிஷ்கினின் பேச்சை தொடர்ந்து பல மேடைகளில் பார்த்து வருகிறேன்.

இயக்குநர் பாலாவை பார்த்து அவந்தா பாலா, இளையராஜாவை பார்த்து அவந்தா இளையராஜா சொல்றது, யாருடா நீ? நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாட்டக்காரா தமிழ் சினிமா-ல?. உலக படங்களை பார்த்து காப்பியடித்து படம் பண்ணிய, ஒரு போலியான அறிவாளி தான் இயக்குநர் மிஸ்கின்”. என நடிகர் அருள் தாஸ் பேசியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.